பசு மாட்டை இறைச்சிக்கு வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் கைது! ஊர்காவற்றுறையில் சம்பவம்

Sri Lanka Police Jaffna Northern Province of Sri Lanka
By Theepan Jul 19, 2024 09:14 PM GMT
Report

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை மூலம் பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் வெட்டுவதற்கு தயாராக இருந்த காளை மாடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (19) வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையில் இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்றுறை உட்பட தீவகத்தின் பல இடங்களிலும் அனுமதி அற்ற முறையில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுதல் மற்றும் மாடுகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

முள்ளிவாய்க்காலில் இரு வீடுகள் உடைத்து கொள்ளை

முள்ளிவாய்க்காலில் இரு வீடுகள் உடைத்து கொள்ளை

சுகாதார வைத்திய அதிகாரி

குறிப்பாக பசு மாடுகள் இறைச்சிக்காக வெட்டும் பாதகச் செயலும் அரங்கேறி வருகின்றது.

பசு மாட்டை இறைச்சிக்கு வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் கைது! ஊர்காவற்றுறையில் சம்பவம் | Family Man Arrested For Slaughtering A Cow

பல வருடங்களாக இடம்பெறும் இச்செயற்பாட்டைத் தடுத்து நிறுத்த முடியாமைக்கு காரணம் இவ்வாறு இறைச்சி வெட்டுபவர்கள் தடுக்க வருபவர்களுக்கு இலஞ்சம் வழங்குகின்றனர் எனவும் இதனால் அவர்கள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே இன்றைய தினம் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி த.சுசிதரன் தலைமையிலான குழுவினர் மேற்படி மாடு வெட்டியவரைக் கைது செய்துள்ளனர்.

பிணையில் விடுதலை

நிகழ்வொன்றுக்காக தாம் மாட்டை வெட்டியதாக கைது செய்யப்பட்டவர் தெரிவித்துள்ளார். எனினும் மாடு வெட்டுவதற்கான அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை.

பசு மாட்டை இறைச்சிக்கு வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் கைது! ஊர்காவற்றுறையில் சம்பவம் | Family Man Arrested For Slaughtering A Cow

குறித்த நபருக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டதுடன் அவர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளர்.

இதேவேளை, சட்டவிரோதமாக மாடு வெட்டுவது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரியப்படுத்துமாறு சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகில் வர முயன்ற முல்லைத்தீவு பெண் உட்பட மூவர் கைது

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகில் வர முயன்ற முல்லைத்தீவு பெண் உட்பட மூவர் கைது

இரத்தக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

இரத்தக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US