முள்ளிவாய்க்காலில் இரு வீடுகள் உடைத்து கொள்ளை
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இரு வீடுகள் உடைக்கப்பட்டு இடம்பெற்ற திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவம் நேற்று(18.07.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் இரு வீடுகளை குறிவைத்து அவற்றின் ஜன்னல்களை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்த திருடர்கள், உறங்கியவர்களை மயக்க மருந்து பயன்படுத்தி மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
இரு நபர்கள் கைது
திருடர்கள் 1/2 பவுண் தோடு மற்றும் 170,000 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளதுடன் இந்த சம்பவம் வீட்டாருக்கு காலை எழுந்த பின்னரே கொள்ளை சம்பவம் தெரியவந்ததுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பேருந்து: 50 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam