மகிந்த மகனால் காப்பாற்றப்பட்ட கடற்படை.. நிறைவேறுமா நாட்டை ஆளும் ஆசை!
இலங்கை அரசியல் களத்தில் தற்போது ராஜபக்சக்கள் தரப்பு தொடர்பில் பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், தான் அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளன.
குறிப்பாக, மகிந்தவின் மகனான யோஷித ராஜபக்ச, மற்றவர்களை ஊக்கப்படுத்த தான் கடற்படையில் சேர்ந்தார் என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், வசந்த கரன்னாகொட நாட்டுக்காக போராடிய தேசிய வீரர், சட்டம் சமம் என்பதற்காக தேசிய வீரர்க்ளை கைது செய்யக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வசந்த கரன்னாகொடவின் கைதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ராஜபக்சக்களின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவ்விடயங்கள் உட்பட பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,