சுரேஷ் சலேவிற்கு பேராபத்தாகும் கருணா விவகாரம்! பொறியில் சிக்கிய பிள்ளையான்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது, கருணா என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
அவர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக வார இறுதி சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது, பிள்ளையான் தரப்பினருக்கும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கிழக்கு மாகாணத்தில் அவர்கள் இணைந்து மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்த பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதென பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிள்ளையான் தரப்பினருக்கு தங்குமிட வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் சுரேஷ் சலேவினால் அறிமுகப்படுத்தப்பட்ட நபர்களே உதவிகளை வழங்கியதாக கருணா தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,