ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவம்! 940 குற்றச்சாட்டுகளையும் மறுத்த நவுஃபர் மௌலவி
ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் தனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை.அதனை செய்தது சஹ்ரான் தான் என நவுஃபர் மௌலவி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 23,270 குற்றச்சாட்டுகள் கொண்ட வழக்கில், முக்கிய பிரதிவாதியான நவுஃபர் மௌலவி தனது தற்காப்பு வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தற்கொலை குண்டுதாரிகளுடன் இணைந்து தாம் ஈஸ்டர் தாக்குதலை சதி செய்ததாகவோ அல்லது திட்டமிட்டதாகவோ எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 940 குற்றச்சாட்டுகளையும் நவுஃபர் மௌலவி மறுத்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சதியுடன் தன்னை இணைக்கும் நேரடி ஆதாரம் இல்லை என வாதம் இறுதியில், தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தன்னை விடுதலை செய்யுமாறு நவுஃபர் மௌலவி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியுஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri