வெளிநாட்டுப் பெண்ணை ஏமாற்றிய முச்சக்கரவண்டி சாரதி - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
வெளிநாட்டு வேலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்து உஸ்பெகிஸ்தான் நாட்டுப் பெண்ணுடம் தவறாக நடந்த கொண்ட முச்சக்கர வண்டி சாரதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறித்த உத்தரவினை உயர் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன வழங்கியுள்ளார்.
10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி உஸ்பெகிஸ்தான் நாட்டுப் பெண்ணை இலங்கைக்கு அழைத்து வந்து, அவரை வற்புறுத்தியும் அச்சுறுத்தியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய முச்சக்கர வண்டி சாரதிக்கே, 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுத் தரப்பால் முன்வைக்கப்பட்ட சான்றுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருந்ததால், உயர் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன பிரதிவாதியைக் குற்றவாளி எனக் கண்டறிந்து இந்தக் கடுமையான சிறைத் தண்டனையை விதித்துள்ளார்.