கந்தளாய் – கித்துளுத்த பகுதியில் தீப்பிடித்து எரிந்த கனரக வாகனம்!
கல் ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துளுத்த பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (18) பிற்பகல் சுமார் 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த குறித்த கனரக வாகனம், கந்தளாய் மகாவலி கங்கைப் பகுதியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவல்
கித்துளுத்து தேவாலயத்திற்கு முன்பாக வாகனத்தை நிறுத்திய சாரதி வழிபாட்டிற்காக தேவாலயத்திற்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே, கனரக வாகனத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கல் ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் கல் ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri