ராஜபக்ச ஆட்சியின் அதிர்ச்சி இரகசியத்தை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர்!
ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்டதாக லசந்த ருஹுணகே தெரிவித்திருக்கின்றார்.
குறிப்பாக, ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை மையமாகக் கொண்டு அவர் எழுதிய"ராஜபக்ச பரம்பரை" என்ற நூல் பரவலாகக் பேசப்பட்டது.
அத்தோடு, ராஜபக்சக்களின் மோசடி தொடர்பில் லசந்த ருஹுணகே பத்திரிகையில் எழுதி வந்ததையடுத்து அவரை கொலை செய்வதற்கும் ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் திட்டம் போட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு அண்மைய காலத்தில் தனது உறவினருக்கு சொந்தமான விடுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் பொய்யாக தொடர்பு படுத்தி சிஐடியால் தன்னைப் கை செய்ய ராஜபக்ச தரப்பினர் முயற்சித்ததாகவும் லசந்த ருஹுணகே குற்றம் சுமத்தியுள்ளார்.
ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடி குறித்து சிங்கள ஊடகவியலாளர் வெளியிட்ட அதிர்ச்சி இரகசியத்தை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.