தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகில் வர முயன்ற முல்லைத்தீவு பெண் உட்பட மூவர் கைது

Tamil nadu India
By Rakesh Jul 19, 2024 02:01 PM GMT
Report

தமிழகம் - இராமேஸ்வரத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் வர முயன்ற முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த பெண் மற்றும் இரண்டு முகவா்களை இந்திய (Indian) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் துறைமுக பொலிஸ் நிலைய உதவி ஆய்வாளா் கடற்கரைப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான விதத்தில் நின்றிருந்த பெண் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். 

இதன்போது, அந்தப் பெண் இலங்கைத் தமிழில் பேசியுள்ளார். 

இதையடுத்து, அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், அவா் முல்லைத்தீவு - பாண்டியன் குளத்தைச் சோ்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. 

மேலும் அவர், கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக 6 மாத விசா பெற்று சென்னைக்கு சென்றுள்ளார்.

நுவரெலியாவில் சடுதியாக அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை

நுவரெலியாவில் சடுதியாக அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை

 தையல் வேலை 

இதனை தொடர்ந்து, புதுச்சேரியில் 24 நாட்கள் தங்கியிருந்த குறித்த பெண், சென்னை - வளசரவாக்கம் பகுதியில் உள்ள இலங்கையை சோ்ந்த நபர் ஒருவரின் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தையல் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகில் வர முயன்ற முல்லைத்தீவு பெண் உட்பட மூவர் கைது | Three Were Arrested For Illeagal Entry By Boat

அதேவேளை, கடந்த ஜூன் 30ஆம் திகதி மதுரைக்கு சென்று, கூடல் நகா் பகுதியில் இலங்கையைச் சோ்ந்த  நபர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இதன்பின்னா், உறவினா் உதவியுடன் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 35 வயதுடைய நபர் மற்றும் 17 வயதுடைய இளைஞர் ஆகியோரை தொடா்பு கொண்டு, இலங்கைக்கு படகில் அழைத்துச் செல்வதற்கு 50 ஆயிரம் ரூபா பணம் தருவதாக கூறியுள்ளார்.

இலங்கை நீர் எக்ஸ்போ - 2024 கண்காட்சியை திறந்து வைத்த ஜீவன் தொண்டமான்

இலங்கை நீர் எக்ஸ்போ - 2024 கண்காட்சியை திறந்து வைத்த ஜீவன் தொண்டமான்

பொலிஸ் விசாரணை 

இதன்படி, இலங்கைக்கு படகில் செல்வதற்காகவே அவர் இராமேஸ்வரத்துக்கு வந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகில் வர முயன்ற முல்லைத்தீவு பெண் உட்பட மூவர் கைது | Three Were Arrested For Illeagal Entry By Boat

இந்நிலையில், இது குறித்து இந்திய பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்டு, குறித்த பெண் மற்றும் முகவா்களாகச் செயற்பட்ட நபர்களையும் கைது செய்துள்ளனா்.

அதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடா்புடைய 39 வயதுடைய மற்றுமொரு நபரையும் பொலிஸார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US