இலங்கை நீர் எக்ஸ்போ - 2024 கண்காட்சியை திறந்து வைத்த ஜீவன் தொண்டமான்
இலங்கை நீர் எக்ஸ்போ (Lanka Water Expo) 2024 கண்காட்சி கூடத்தினை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார்.
Indian Water Today (pvt) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வானது, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் - BIMCH இன்றைய தினம் (19) இடம்பெற்றுள்ளது.
கண்காட்சியின் நோக்கம்
இந்த கண்காட்சியானது நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்திற்கு செயலூக்கமான வலையமைப்பினை தடங்கள் இன்றி வழங்குதல் மற்றும் உலகளாவிய நீர் நெருக்கடிக்கான தீர்வுகளை அடைவதில் ஒன்றிணைந்து பணியாற்றுதல் என்பவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும், இலங்கை நீர் மற்றும் கழிவு நீர் துறையில் வணிக வாய்ப்புகளை ஆராய்ந்து அறிவைப் பகிர்வதற்கும், கண்டுபிடிப்பதற்கும் சரியான வணிகத் தளத்தை உருவாக்கவும், கடல் சந்தைகள் போன்றவற்றில் இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா திகழ்கின்றது.
ஆகவே இதன்மூலம் இந்திய மற்றும் இலங்கையின் நீர் மற்றும் சந்தை வாய்ப்புகளுக்கு கூடுதல் நன்மையை வழங்குகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு தீர்வு வழங்குநர்கள் ஒன்றிணைந்து எல்லைகளைத் தாண்டி வணிக மற்றும் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இலங்கையின் நீண்ட கால மூலோபாய கூட்டணிகள் மற்றும் கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவதற்கு இந்த திட்டமானது பங்காற்றுகின்றது.
இந்நிகழ்வில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், நீர் வழங்கல் அமைச்சின் திட்டமிடல் மேலதிக செயலாளர் சுகத் தர்மகீர்த்தி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பிரதி தலைவர் சஞ்ஞீவ விஜயகோன், அமைச்சின் பிரத்தியேக செயலாளர் மொகமட் காதர், சமூக நீர் வழங்கல் பிரதி பணிப்பாளர் ஆனந்த குமார மாபா, ION Exchange India வின் தலைவர் சாஹில் சாகா, ION Exchange india வின் நிறைவேற்று பிரதி தலைவர் சந்தீப், இலங்கை சோலர் கைத்தொழில் சங்க தலைவர் உபயவர்தன மற்றும் பல உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |