நீதி அமைச்சரின் அறிவுறுத்தலை மீறி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22 ஆம் திருத்தச்சட்ட மூலம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நீதி அமைச்சின் செயலாளருக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதினை இடைநிறுத்துமாறு நீதி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம்
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக்கூடாது என சமூகத்தில் நிலவக்கூடிய அசாதாரண நிலைமையை கருத்தில்கொண்டு தாம் இவ்வாறு அறிவுறுத்தியதாக நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் குறிப்பிடப்படும் அரசியலமைப்பின் 83 ஆம் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு வருடங்களுக்கு மேற்படாத என்ற வசனத்தை ஐந்து வருடத்திற்கு மேற்படாது என மாற்றியமைப்பதற்காக இந்த திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
யாழ் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மற்றொரு சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் கிருசாந்தி..! அம்பலமாகும் உண்மைகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |