முல்லைத்தீவில் குடும்பஸ்தரொருவர் மாயம்!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
குறித்த நபர் காணாமல்போயுள்ளதாக (11.09.2023) ஆம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
இரணைப்பாலை, 5 ஆம் வட்டாரம் பகுதியினை சேர்ந்த 65 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
குறித்த நபர் கடந்த(10.09.2023) ஆம் திகதி இரணைப்பாலை பகுதியில் உள்ள குளமொன்றினை பார்ப்பதற்காக சென்ற வேளை காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0775345240/ 0775758291 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



