ஆட்சியை கவிழ்க்க திரை மறைவில் சதி.. அதிரடி கைதுகளை ஆரம்பிக்க போகும் அநுர
சமகால அநுர அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அதிகாரத்தில் உள்ளமை முன்னாள் அரசியல்வாதிகளுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது.
தேர்தல் பரப்புரையின் போது வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய முன்னாள் மோசடி அரசியல்வாதிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சூளுரைத்திருந்தார்.
அதங்கமைவாக அண்மைக்காலமாக பிரபலமான முன்னாள் அமைச்சர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் என ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் பலர் கைது செய்யப்படலாம் என பலரும் அச்சத்தில் உள்ளனர்.
இவ்வாறான நிலையில் சமகால அரசாங்கத்தை பலமிழக்க செய்யும் நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.
எதிர்வரும் தேர்தல்களின் போது பலமான கூட்டணி ஒன்றுடன் அநுர அரசாங்கத்தின்கு சவால்விடுக்கும் வகையில் திட்டங்கள் திட்டப்பட்டு வருகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி....



