பட்டம் செய்யச் சென்ற மாணவன் கண்டெடுத்த குண்டு
அம்பலாங்கொடை பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் கைக்குண்டு ஒன்றை கண்டெடுத்துள்ளார்.
அம்பலாங்கொடை மாதம்பாகம தேவகொட பகுதியில் இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
பட்டம் செய்வதற்காக வீட்டுக்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்ற வேளையில் மாணவன் கைக்குண்டொன்றை கண்டெடுத்துள்ளார்.
இனந்தெரியாத பொருட்களை கையில் எடுப்பதனால்
குறித்த மாணவனின் உறவினர் ஒருவர், கண்டெடுக்கப்பட்டது கைக்குண்டு என்பதை அடையாளம் கண்டு காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் கைக்குண்டை செயலிழக்கச் செய்துள்ளனர்.
கைக்குண்டை கண்டெடுத்த மாணவன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பந்து என நினைத்து குறித்த சிறுவன் கைக்குண்டை கையில் எடுத்துள்ளதாகவும் அதிர்ஸ்டவசமாக எந்தவொரு ஆபத்தும் நிகழவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு இனந்தெரியாத பொருட்களை கையில் எடுப்பதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து பொலிஸார் மாணவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



