ஒமிக்ரோன் தொடர்பில் வெளியிடப்பட்டு வரும் போலிப் பிரச்சாரங்களில் உண்மையில்லை
ஒமிக்ரோன் கோவிட் திரிபு தொடர்பில் வெளியிடப்பட்டு வரும் போலிப் பிரச்சாரங்களில் உண்மையில்லை என மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் வைரஸ் தொற்று குறித்த நிபுணத்துவ மருத்துவர் நதிக ஜானகே தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் திரிபிற்கு தடுப்பூசிகளினால் பயனில்லை என சில தரப்பினர் செய்து வரும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒமிக்ரோன் திரிபு பரவுகையை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசி ஏற்றுகையே சிறந்த வழிமுறை எனவும் தெரிவித்துள்ளார். தடுப்பூசி ஏற்றுகையின் மூலமே எந்தவொரு கோவிட் திரிபினையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுகை மற்றும் முதலாம் இரண்டாம் மருந்தளவு தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதற்கு மக்கள் கூடுதல் ஆர்வம் காட்ட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் திரிபிற்கு மேலதிகமாக வேறும் ஆபத்தான திரிபுகளும் உலகில் இருக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் எனவும், தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டுமெனவும் டொக்டர் நதிக ஜானகே தெரிவித்துள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri