போலி மருந்துச்சீட்டு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தல்
மருந்தக உரிமையாளர்கள் எவ்வித பொறுப்புமின்றி தமது இலாபத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு மருந்துகளை வெளியிடுவதாக அகில இலங்கை மருந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் ரவி கலன்சூரிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளை அதிகமாக உட்கொள்ளும் போக்கு காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போலியான மருந்து குறிப்புகளை வழங்கி சிலர் மருந்துகளை கொள்வனவு செய்து வருவதாகவும் இது தொடர்பில் மருந்தக உரிமையாளர்கள் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மருந்து விநியோகம்
தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்படுத்தும் நிலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கும் போதைக்கு அடிமையானவர்களுக்கும் மருந்துகளை விநியோகம் செய்யும் போது மருந்தக உரிமையாளர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தீவிரமடையும் போர்... உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியனுக்கு அனுப்பிய ட்ரம்ப் News Lankasri
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri