போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பண்டிகை காலங்களில் போலி நாணயத் தாள்கள் குறித்து விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுள்ளனர்.
குறிப்பாக வியாபாரத்தளங்களின் உரிமையாளர்களிடமும் இது தொடர்பான கோரிக்கையை பொலிஸார் விடுத்துள்ளனர்.
பண்டிகை காலங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது போலியான தாள்கள் பயன்படுத்தப்படும் வாய்ப்புக்கள் உள்ளன
இதன்போது பல்வேறு உத்திகளை கையாண்டு போலியான நாணயத் தாள்களை பயன்படுத்த மோசடியாளர்கள் முனையக்கூடும்.
இந்தநிலையில் கடந்த வாரத்தில் மாத்திரம் கிருலப்பனை, பாதுக்க, களுத்துறை மற்றும் ரங்கல ஆகிய இடங்களில் 5000 ரூபா மற்றும் 1000 ரூபா போலி நாணய தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டனர்.
போலி நாணய அச்சிடலுக்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்தே பொலிஸார் போலி நாணயத்தாள்கள் தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
