கிண்ணியாவில் போக்குவரத்து தடைபட்டுள்ளது! படகு சேவை நடைமுறையில்
திருகோணாமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட - பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. தரை வழி போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இயந்திரப் படகு மூலமாக மக்களை ஏற்றி இறக்குகின்றார்கள் இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் பலர் தஞ்சம் அடைந்துள்ளார்கள். காலநிலையில் மாற்றம் ஏற்பட்ட போதிலும் நீரின் வேகம் ஓரளவு குறைந்துள்ளது.
எனினும் வீடுகளுக்குள் புகுந்த நீர் இன்னும் அவ்வாறே உள்ளன. நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது. எனினும் மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது.
மகாவலி பெருக்கெடுப்பின் காரணமாக தாழ் நிலப் பகுதியில் உள்ள பல கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் மக்கள் தமது சொந்த இருப்பிடங்களை விட்டு மக்கள் Boat இயந்திரப் படகு மூலமாக வெளியேற் றப்படுகின்றனர். பல போக்குவரத்து மார்க்கங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. பலர் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் 289 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 4117 நபர்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 896 குடும்பங்களைச் சேர்ந்த 3118 பேர் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தக்கமடைந்துள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகள் கிண்ணியா பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை ஆலங்கேணி - பூவரசந்தீவுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது Boats மூலமாக மக்கள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றார்கள் திருகோணமலை - கொழும்பு வீதியில் குட்டிக்கராச்சி பாலத்தில் நீர் மட்டும் குறைந்த போதிலும் அதனுடான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை மகாவலி கங்கையின் பெருக்கெடுப்பின் காரணமாக பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. கிண்ணியா,குறிஞ்சாக்கேணி, அடப்பனார் வயல், ஆலங்கேணி,ஈச்சந்தீவு, பூவரசந்தீவு, சம்மாவச்சதீவு, நெடுந்தீவு, கச்சக்கொடித்தீவு, உப்பாறு, சோலை வெட்டுவான் முதலான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

