விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான யோசனை முன்வைப்பு
விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடிப்பது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கபடவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஓய்வு பெறும் வயதெல்லை
மேலும் தெரிவிக்கையில்,“விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடிப்பது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கபடவுள்ளது.
இந்த தீர்மானத்தினால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகள் உள்ளிட்ட விடயங்களுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்களுடனான சந்திப்பின்போது தனக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
போஷாக்கு பிரச்சினை
இதேவேளை, நாட்டில் உள்ள போஷாக்கு பிரச்சினைகளை கண்டறியும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பதிவாகும் போஷாக்கு குறைபாடு தொடர்பான சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளது.
இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தரவுகள் மற்றும் கணக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக.” அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.