அரச ஊழியர்களுக்கு இன்று முதல் விதிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள்! வெளியாகவுள்ள விசேட சுற்றறிக்கை
அரசாங்க உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, இன்று திங்கட்கிழமை (26) சுற்றறிக்கை வெளியிடக்கூடியதாக இருக்கும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

பொருத்தமான ஆடை
பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்லும் போது சேலை அல்லது அலுவலகத்திற்கு பொருத்தமான ஆடையொன்றை அணியலாம் என்று ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும், சேலை உள்ளிட்ட ஆடைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சிலர் சுற்றறிக்கையின் முதல் பகுதியை மாத்திரம் பின்பற்றுவதாகவும் பொருத்தமான அலுவலக ஆடை என்றால் என்ன என்பதை மறந்து விட்டதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
ரஜினி வீட்டில் பொங்கல்.. ப்ளேட்டை ஸ்பூனால் தட்டி கொண்டாடிய சூப்பர்ஸ்டார்! வீடியோவை பாருங்க Cineulagam
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam