யாழ்.ஊர்காவற்றுறையில் நில அளவை திணைக்கள அதிகாரிகளை விரட்டியடித்த மக்கள் (photos)
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை, தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமுக்குக் காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அப்பகுதி மக்களின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணி அமைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04.04.2023) அப்பகுதி மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இரகசிய நடவடிக்கை
நாரந்தனை வடக்கு ஜே/56 தம்பாட்டியில் உள்ள இறங்குதுறையில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணி சுவீகரிக்கும் நோக்கில் இரகசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது இதனை அறிந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணியை அளந்து கடற்படையினருக்கு வழங்குவதற்காக அங்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தின் வாகனத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த கடற்படையினர் போராட்டத்தில்
ஈடுபட்டவர்களைப் புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகின்றது.








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
