எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீயணைப்பு செயற்பாட்டில் டிரான் அலஸ் செய்த பாரியளவிலான மோசடி அம்பலம்!

Tiran Alles NPP Government
By Kanthan Aug 05, 2026 11:36 AM GMT
Report

 எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு இலங்கையில் பிரதான மட்டத்தில் நிறுவப்பட்டிருந்த ஒரு நிறுவனமே ஈடுபட்டிருந்தது. அந்த நிறுவனத்திலுள்ள தீயணைப்பாளர்கள் சாதாரண பயிற்சி பெற்றவர்கள்.அத்தோடு தீயணைப்புக்கு தேவையான உபகரணங்கள் போதியளவு இருக்கவில்லை.

குறித்த நிறுவனம் தீயை அணைப்பதற்கு பயன்படுத்திய இரசாயனங்கள் அனைத்தும் காலாவதியானதால் தீ பாரிய அளவில் பரவுவதற்கும் காரணமாக இருந்துள்ளது.அத்தோடு தீயணைப்பு நடவடிக்கைக்காக குறித்த நிறுவனம் பல மில்லியன் ரூபாக்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.

என்குஸ் பயர் நிறுவனமே குறித்த தீயணைப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

அடுத்த இலக்கு மைத்திரி! அரசாங்கத்தை உசுப்பேற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள்..

அடுத்த இலக்கு மைத்திரி! அரசாங்கத்தை உசுப்பேற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள்..

டிரான் அலசின் கம்பனி செய்த மோசடி

இந்த நிறுவனம் முன்னாள் அமைச்சர் டிரான் கிறிஸ்டோபர் பிரசன்ன அலசுக்கு சொந்தமானதாகும்.அவரின் நிறுவனமே காலாவதியான தீயணைப்பு பொருட்களை பாவித்து தீயை மேலும் பரவலடைய செய்ததோடு மோசடியாக பல மில்லியன் ரூபா தொகையை பெற்றுள்ளதாக இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.

டிரான் அலஸ் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தில் மேற்கொண்ட மோசடி தொடர்பில் அவருக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதரங்களை கொண்டே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்த கருத்து இந்த தீவிபத்தால் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அல்லது அதற்கும் அதிகமான சுற்றுச்சூழல் சேதம் ஏற்பட்டது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் நைட்ரிக் அமிலம் உட்பட பல இரசாயனங்கள் இருந்ததால் தீயணைப்பு செயற்பாட்டுக்கு பயன்படுத்த பாவிக்கப்பட்ட கலாவதியான இரசாயனங்கள் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீயணைப்பு செயற்பாட்டில் டிரான் அலஸ் செய்த பாரியளவிலான மோசடி அம்பலம்! | Express Pearl Ship Case Tiran Alas

இந்தத் தீயை அணைக்கும் செயற்பாட்டுக்கு பெறப்பட்ட பல மில்லியன் கணக்கான டொலர்கள் எங்கே? அரசாங்கமும் இததற்குப் பணம் செலுத்தியதா? பணம் செலுத்தியிருந்தால் எவ்வளவு தொகை செலுத்தப்பட்டது என்பது குறித்தும் தெரியவரவில்லை.

தீ மேலும் பரவுவதற்கு இதில் பயன்படுத்தப்பட்ட அனைத்து திரவங்களும் காலாவதியாகி குவித்து வைக்கப்பட்டிருந்தவையாகும். அவை அனைத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இன்று என்குஸ் பயர் என்ற நிறுவனம் மூடப்பட்டுள்ளது.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பாரிய அளவில் பரவுவதற்கும் பாரிய சேதத்துக்கு காரணமான டிரான் அலசின் கம்பனிக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் எவ்வித விசாரணையும் நடைபெற்றவில்லை.இன்றும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் டிரான் அலஸ் இருக்கிறார்.இது தொடர்பில் முறையாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தான் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார். 

சசிந்திர ராஜபக்ச மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சசிந்திர ராஜபக்ச மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

 

தென்னிலங்கை சிறைச்சாலையில் தீவிர பாதுகாப்பு - ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்க நடவடிக்கை

தென்னிலங்கை சிறைச்சாலையில் தீவிர பாதுகாப்பு - ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்க நடவடிக்கை

  

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US