அரசாங்கம் உலகத்துக்கு காட்டுகின்ற படத்தை நாங்கள் அம்பலப்படுத்துவோம்: கஜேந்திரகுமார் எச்சரிக்கை
அரசாங்கம் உலகத்துக்கு காட்டுகின்ற படத்தை நாங்கள் அம்பலப்படுத்த வேண்டி வரும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றையதினம் (13.09.2023) யாழ்.தைட்டியில் இடம்பெற்ற காணி அளவீட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று இடம்பெற இருந்த அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பிரதேச செயலாளர் உறுதிப்படுத்தி இருந்தார். மீண்டும் எப்போ அளக்கப் போகின்றார்கள் என கேட்டபோது இன்னும் திகதி நியமிக்கப்படவில்லை என கூறியிருந்தார்.
இந்தப் பின்னணியில் நான் அவர்களுக்கு சொன்ன கருத்து என்னவென்றால் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னதாகவே இந்த தையிட்டி விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட போகின்றது என்கின்ற செய்தி எம்மிடம் வந்திருக்க, தொல்லிப்பழையில் இடம்பெற்ற பிராந்திய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்த விடயம் பேசப்பட்டுஅதை எதிர்த்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசாங்க அதிபருக்கு கடிதம்
அதற்குப் பின்னர் மாவட்ட ரீதியாக யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றுக் கூட்டத்திலும் இந்தப் பிரச்சினை மீண்டும் மேல் மட்டத்தில் எடுக்கப்பட்டு ஏக மனதாக இந்த தையிட்டு விகாரை சட்டவிரோதமாக நடைபெறுவதாகவும் அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்கின்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தக் கூட்டங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்புடன் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட இடத்தில் இன்றைக்கு ஜனாதிபதி வந்து ஏதோ மாவட்டத்தில் குழுக்களை அமைத்து இந்த மாவட்டத்தில் நடக்கும் அனைத்தும் அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஏனைய தரப்புகளின் முழு பங்களிப்போடுதான் அனைத்து நடவடிக்கைகளும் நடக்கும் என்று உலகத்துக்கு காட்டப்படுகிறது.
இந்த சூழ்நிலையிலே, ஏற்கனவே இரண்டரை
வருடங்களுக்கு முன்பு எடுத்த தீர்மானத்தை மீறி இந்த தையிட்டி விகாரை
கட்டப்பட்டிருக்கின்றது என்கின்ற நிலையில் நாங்கள் பிரதேச செயலாளருக்கும்
அரசாங்க அதிபருக்கும் அறிவித்திருக்கின்றோம் எழுத்து மூலமாக நாங்கள் இன்று ஒரு
கடிதம் எழுத இருப்பதாகவும், ஜனாதிபதிக்கும் அதன் பிரதி அனுப்புவதாகவும் இந்த
விகாரை சார்ந்த விடயங்கள் மற்றும் காணி எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி எந்த
ஒரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும்
தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய மற்றும் ஏனைய கட்டமைப்புகள் உடைய
முழு ஒத்துழைப்புடன் தான் இந்த முடிவுகள் எடுக்கப்படலாம்.
அப்படி செய்யாவிட்டால் அரசாங்கம் உலகத்துக்கு காட்டுகின்ற குழுக்கள் என்று சொல்லி உலகத்துக்கு காட்டுகின்ற படத்தை நாங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாங்கள் அம்பலப்படுத்த வேண்டி வரும் என்கின்ற விடயத்தையும் நாங்கள் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 22 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
