நல்லூரானுக்கு சித்திரதேர் அமைந்த வரலாறு
சிலைவடித்து உயிர் கொடுத்து கலையழகாய் காட்சி தரும் சிற்பங்கள் நிறைந்தவுயர் சித்திரத்தேருக்கு அகவை 59யை எட்டியுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் முன்னைய சித்திரத்தேர் பழமையானதை உணர்ந்த கோயிலின் அப்போதைய நிர்வாகி இரகுநாத ஷண்முகதாஸ் மாப்பாணர் ஒரு புதிய சித்திரத்தேரை உருவாக்கும் பணியினை ஆரம்பித்தார்.
இந்நிலையில் தன்னோடு தனது தம்பியாரான இரகுநாத குமாரதாஸ் மாப்பாணரையும் இணைத்து கொண்டு தேர்த் திருப்பணியை ஆரம்பித்தார்.
சித்திரத் தேர்
அந்தவகையில் இந்தியா திருவிடைமருதூர் கோவிந்தசாமி ஸ்தபதி தலைமையிலான சிற்பகலைஞர்களுடன் நல்லூர் கந்தசாமி கோயில் சிற்பகலைஞர் வட்டுக்கோட்டை திருநாமம் மற்றும் அவரது உதவியாளர்கள் என இந்திய இலங்கை சிற்ப கலைஞர்கள் இந்த சித்திரத் தேர் உருவாக்கத்தில் பங்கு கொண்டுள்ளனர்.

மேலும் கோயில் வளாகத்தில் வைத்து உருவான இத்தேர் வேலைகளை தினமும் அருகிலிருந்து தனது மேற்ப்பார்வையில் அழகுற நீண்ட காலமாக இருக்கும் வண்ணம் ஒரு தேரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராய் இரகுநாத குமாரதாஸ் மாப்பாணர் சிறப்பாக செயற்பட்டமையும் பெருந்தேரினை உருவாக்கியுள்ளார்.
சித்திரத் தேரில் சண்முகப்பெருமானை எழுந்தருளல் செய்வித்து திருவீதியுலா பவனி வர 1964 ஆம் ஆண்டு ஆவணி மாதம் புதிய சித்திரத் தேர் வெள்ளோட்டம் கண்டதுடன் சண்முகப்பெருமான் எழுந்தருளி காட்சி புரிந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        