முல்லைத்தீவில் வெள்ளத்தினால் வெளியில் தெரிந்த வெடிபொருட்கள்
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில வெளியில் தென்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இந்த வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி முறைப்பாட்டிற்கமைய, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த பகுதியினை அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
இது விடுதலைப்புலிகள் காலத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
வெடிபொருட்களை பாரப்படுத்தும் நடவடிக்கை
அண்மையில் பெய்த கடும் மழைவெள்ளம் நிலத்தினை அரித்து பாய்ந்துள்ளது. இதனால் இந்த வெடிபொருள் எச்சங்கள் தென்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றின் அனுமதிபெற்று குறித்த வெடிபொருட்களை சிறப்பு அதிரடிப்படையினரிடம் பாரப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan