கிளிநொச்சியின் விளையாட்டு வளாகத்தை ஆய்வு செய்த பிரதி அமைச்சர்
கிளிநொச்சியின் (Kilinochchi) விளையாட்டு வளாகத்தின் தற்போதைய நிலையை மதிப்பிடுவதற்காக விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன (Sugath Thilakarathna) அங்கு கள ஆய்வை மேற்கொண்டு விடயங்களை அறிந்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த வளாகம், திறக்கப்பட்டதிலிருந்து குறுகிய காலத்திற்குள் தரப் பிரச்சினைகள் காரணமாக செயல்பாட்டு சவால்களை எதிர்கொண்டமை இந்த ஆய்வு பயணத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வு
ஆய்வின் போது, வெளிப்புற மற்றும் உட்புற மைதானங்கள், உடற்பயிற்சி மையம் மற்றும் நீச்சல் குளம் ஆகியவற்றையும் பிரதி அமைச்சர் ஆய்வு செய்துள்ளார்.
இந்தநிலையில், வட மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறுவர்களின் நலனுக்காக இந்த வசதியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |