இந்திய அணியின் இளம் வீரருக்கு கிடைத்த மரியாதை
இங்கிலாந்து கிரிக்கட் அணிக்கு எதிரான ஐந்தாவது 20க்கு 20 போட்டியில் இந்திய அணியின் ஆரம்ப அபிசேக் சர்மா 13 ஆறு ஓட்டங்களை அடித்து சதம் ஒன்றை பெற்றிருந்தார்.
இந்தநிலையில், அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது இந்திய முதன்மைப் பணக்காரர் முகேஸ் அம்பானி உட்பட்ட ரசிகர்கள் என அனைவரும் எழுந்து நின்று கரகோசம் செய்த காட்சி பேசு பொருளதாக மாறி உள்ளது.
அவர் இந்த போட்டியில் 54 பந்துகளில் 135 ஓட்டங்களை பெற்றிருந்தார். அதில் அவர் 13, ஆறு ஓட்டங்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்களை பெற்றிருந்தார்.
முக்கிய சாதனைகள்
அத்துடன், அந்த ஓட்டங்களில் அவர் பல்வேறு 20க்கு 20 சாதனைகளையும் படைத்திருந்தார். இதன் மூலம் உலக அளவில் 20க்கு 20 போட்டிகளில் பெறப்பட்ட இரண்டாவது அதிவேக சதம் மற்றும் மூன்றாவது அதிவேக சதம் ஆகிய இரண்டு முக்கிய சாதனைகளை அபிசேக் சர்மா படைத்தார்.
When even Ambani Ji gave him a standing ovation, you know Abhishek Sharma played a phenomenal innings. What a performance! 🔥 Superb, man!#INDvsENG #bcci #Cricket pic.twitter.com/sZgCiMp4rK
— Viren_ (@Virendracoolx1) February 3, 2025
மேலும் 20க்கு 20 போட்டியின் ஒரே இன்னிங்ஸில் அதிக ஆறு ஓட்டங்களை பெற்ற இந்திய வீரர் மற்றும் இந்திய அணிக்காக சர்வதேச 20க்கு 20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
அபிசேக் சர்மாவின் ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 247 ஓட்டங்களை பெற்றது. எனினும், பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 97 ஓட்டங்களுக்கு தமது அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |