நிறுவனமொன்றில் பணமோசடி செய்த முகாமையாளருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு - ஓட்டமாவடியிலுள்ள நிறுவனமொன்றில் 44 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் மாவட்ட விசேட குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அதன் முகாமையாளரை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நிறுவனமொன்றில் கடமையாற்றி வந்த முகாமையாளர் அந்த கம்பனியின் 44 இலச்சத்து 67 ஆயிரத்து 353 ரூபாவை மோசடி செய்துள்ளதாக அந்த நிறுவனமொன்றில் உரிமையாளர் குறித்த நபருக்கு எதிராக மாவட்ட விசேட குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
இதனையடுத்து குறித்த நபரை நேற்று கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிறுத்தப்பட்டபோது இவரை எதிர்வரும் 13 ஆம் திதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 12 மணி நேரம் முன்
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam