உகண்டாவில் இருக்கும் ராஜபக்சக்களின் பணம்! அதே விமானத்தில் மீண்டும் கொண்டு வர நாமல் யோசனை
ராஜபக்சக்கள் உகண்டாவிற்கு பணம் கொண்டு சென்றிருந்தால் ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை அதே விமானங்களில் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் பணத்தினை மீளத் திரும்பப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாளுக்கு நாள் எம்மை குறை கூறுகின்றனர். மத்தளை விமான நிலையம் பற்றி பேசுகிறார்கள். மத்தளையில் நெல் களஞ்சியம் செய்தால் எங்கே விமானங்கள் வந்து இறங்க முடியும்? விமானத்திற்கு தேவையான எரிபொருளை எவ்வாறு பெற்றுக் கொள்வது? எரிபொருளுக்கு பதிலாக நெல்லை நிரப்புவதா?
அதே விமானத்தில் பணத்தைக் கொண்டு வாருங்கள்
போர்ட் சிட்டி அபிவிருத்தி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தினார்கள். காரணம் தான் என்ன? ராஜபக்சக்கள் போர்ட் சிட்டி மூலம் ஊழல் செய்ததாக கூறுகின்றனர். விசாரணைகள் செய்து செய்து விடுவிக்கப்பட்டு மீண்டும் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
தாமரை கோபுரத்தின் பணிகளையும் இடைநிறுத்தினர். அதிலும் ராஜபக்சக்களை ஊழல் செய்ததாக தெரிவித்தனர். பின்னர் அதுவும் பொய்யானது.
ராஜபக்சக்கள் உகாண்டாவிற்கு பணம் கொண்டு சென்றிருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை அதே விமானங்களில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
