விடுதலைப்புலிகளின் தங்கத்தினை தேடி புதுக்குடியிருப்பில் அகழ்வு பணி
யுத்த காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினர் ஆயுதங்கள் மற்றும் தங்கம் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியிலுள்ள தனியார் காணியில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் மேற்பார்வையில் இன்றையதினம் (16.08.2024) அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருந்தன.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, பொலிஸார், இராணுவத்தினர், கிராம சேவையாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
நீதிபதி உத்தரவு
அகழ்வு இயந்திரத்தின் உதவியுடன் நிலத்தில் பல மணிநேரம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதும் ஆயுதங்களோ அல்லது வேறு எதனையும் கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்பட்டுள்ளது.

இந்நிலையில். தோண்டப்பட்ட இடங்களில் எதுவும் கிடைக்காததால், மீண்டும் தோண்டப்பட்ட இடங்களை மூட நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி தர்மலிங்கம் உத்தரவிட்டதினை தொடர்ந்து, மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri