மைத்திரியின் ஆதரவை நிராகரித்த ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மைத்திரிபால சிறிசேன தனது ஆதரவை தெரிவிக்க விரும்பினாலும், அந்த கோரிக்கையை அவர், நிராகரித்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்த போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன போன்ற நம்பிக்கையற்ற நபரின் ஆதரவை தாம் ஒருபோதும் விரும்பவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் முன்னாள் தலைவர்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் இப்போது எங்கும் இல்லாத நிலையில் இருக்கிறார்.

எந்தக் கட்சியும் அவரை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. உங்கள் தன்னம்பிக்கையை நீங்கள் அழிக்கும்போது, ஆதரவின்றியே இருக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி ஒருவர் இவ்வளவு தாழ்வான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது எமக்கு வருத்தமளிக்கிறது“ என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam