கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஆரம்பம் - செய்திகளின் தொகுப்பு
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய இன்று (05.09.2023) ஆரம்பமாகவுள்ளது.
முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக, வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அன்றைய தினம் முன்னிலையாகியிருந்தனர்.
சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புக்களுடன் இன்று முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனவே இன்று கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளன.
இந்த செய்தியுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மரக்கிளைகளில் சிக்கிய சடலங்கள்... கரைகளில் அழுகும் மீன்கள்: டெக்சாஸ் பேரிடரின் கோர முகம் News Lankasri
