சனல்-4 காணொளி குறித்து விசாரணை நடத்தப்படும் : நாடாளுமன்றத்தில் அரசாங்கம் அறிவிப்பு
சனல்-4 காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரித்தானியாவின் சனல்-4 ஊடகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பற்றிய விபரங்களை வெளியிடவுள்ளதாகவும் இலங்கை அரசியல்வாதிகளை மேற்கோள் காட்டியும் சனல்-4 சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
சனல்-4 காணொளி
மேலும், சம்பவம் தொடர்பிலான காணொளி வெளியிடப்பட்டமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் குறித்த காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவிக்குழு
இந்த சேனல் 4 ஊடகத்தின் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவிக்குழு ஒன்றை நிறுவுவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவை ஏற்பட்டால் சர்வதேச ரீதியிலான விசாரணைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri