ரணிலுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்த இளைஞன்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்ட இளைஞரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் நேற்று (04.09.2023) பிற்பகல் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர்
எப்பாவல - மெடியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் நேற்று முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், இந்த அச்சுறுத்தல் பதிவை இட்ட இளைஞரைத் துரிதமாக கண்டறிந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அவரைக் கைது செய்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri