காணாமல்போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்திற்கு இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகள்
இலங்கையிலுள்ள காணாமல்போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்திற்கு இதுவரை 14988 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலக ஆணையாளர்களில் ஒருவரான யோகராஜா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள விடுதியொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.09.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கிடைத்துள்ள முறைப்பாடுகள்
மேலும் தெரிவிக்கையில், 2018ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அலுவலகத்திற்கு இதுவரையில் 14 ஆயிரத்து 988 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதனை காலத்தின் அடிப்படையில் 3 பிரிவுகளாக பிரித்தோம்.
அதில் 2000 ஆண்டில் இருந்து 2020 வரை முதலாம் தரத்திலும், 1990ம் ஆண்டில் இருந்து 2000 ஆயிரம் ஆண்டு வரை இரண்டாம் தரத்திலும், 1990ம் ஆண்டுக்கு பிற்பட்டதை 3ம் பிரிவாகவும் பிரித்துள்ளோம்.
இதனடிப்படையில் முதலாவது தரத்திலுள்ள விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். இதில் 6 ஆயிரத்து 25 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாட்டில் இன்று வரைக்கும் 4 ஆயிரத்து 18 முறைப்பாடுகளை பூர்வாங்க விசாரணை செய்துள்ளோம்.
சந்தித்த எதிர்ப்புகள்
எமது விசாரணையின் போது முல்லைத்தீவு, மட்டக்களப்பு நகர் போன்ற பல இடங்களில் பல்வேறுபட்ட எதிர்ப்புக்களை சந்தித்துள்ளோம்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்வது அவர்களது உரிமை. அதனை அவர்கள் செய்வதற்கு நாங்கள் என்றுமே தடையில்லை. ஆனால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த கடமைகளை சரிவர செய்துகொண்டிருக்கின்றோம்.
முதலாவது பிரிவில் 6025 முறைப்பாட்டில் இன்றுவரை 4018 முறைப்பாடுகளை விசாரணை செய்து முடித்துள்ளோம். அதில் 80 வீதமான முறைப்பாட்டாளர்கள் வருகைதந்து எங்கள் விசாரணைக்கு உறுதுணையாக இருந்து அறிக்கைகளை பெற்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam
