காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிடம் விசாரணை(Photos)
திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில், வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தம்பலகாமம் பிரதேச செயலக கேட்போர்
கூடத்தில் இன்றையதினம் (03.09.2023) விசேட கூட்டமும் விசாரணையும் இடம்பெற்றுள்ளது.
உறவினர்களின் வாக்குமூலம்
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற இந்த விசாரனையில் தம்பலகாமம், கிண்ணியா, திருகோணமலை மற்றும் மொறவெவ ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்தனர்.
மேலும், இதில் பல காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது வாக்குமூலங்களை அளித்ததுடன், ஆணைக்குழுவினர் அதனை பதிவு செய்து கொண்டனர்.
இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக ஆணையாளர் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக
உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.








இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri
