கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச கண்காணிப்பின்றி முன்னெடுக்கப்படுவதில் திருப்தியில்லை: ரவிகரன்

Mullaitivu Northern Province of Sri Lanka Srilankan Tamil News
By Ashik Sep 06, 2023 04:22 PM GMT
Report

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு விவகாரம், சர்வதேச கண்காணிப்பின்றி இடம்பெறுவது திருப்தியளிக்கவில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த அகழ்வுப் பணியில் தொல்லியல் துறையினர் மீதும் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த அகழ்வுப் பணி இன்று(06.09.2023) முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவை அரியணை ஏற்றிய மெல்கம்: அரசியல் களத்தை அதிரவைக்கும் சனல்4 (Video)

கோட்டாபயவை அரியணை ஏற்றிய மெல்கம்: அரசியல் களத்தை அதிரவைக்கும் சனல்4 (Video)


இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சீரற்ற காலநிலையால் தாமதமான அகழ்வுப் பணிகள்

“கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான விடயத்தில், கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற ஆரம்பக்கட்ட அகழ்வுப் பணிகளில் 13 உடலங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

அதன் பின்னர் அந்த அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, கடந்த 05 ஆம் திகதி மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச கண்காணிப்பின்றி முன்னெடுக்கப்படுவதில் திருப்தியில்லை: ரவிகரன் | Excavation Of Kokkuthoduvai Human Burial

எனினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக அகழ்வுப் பணிகள் தாமதமாகி, இன்று  இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த அகழ்வுப்பணி தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி முல்லைத்திவு நீதிமன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்ந்தவர்களும் இந்த அகழ்வுப் பணிகளில் இணைத்துக்கொள்ள படவேண்டும் என்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.

புதிய கல்வி முறைக்கான யோசனைகள் மாணவர்களிடமிருந்து பெறப்படும்: ஜனாதிபதி உறுதி

புதிய கல்வி முறைக்கான யோசனைகள் மாணவர்களிடமிருந்து பெறப்படும்: ஜனாதிபதி உறுதி


தொல்லியல் துறையினர் மீதான சந்தேகங்கள்

ஆனால் இங்கு அவ்வாறு யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்ந்தவர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. தற்போது மக்கள் மத்தியில் தொல்லியல் துறையினர் மீது பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஏன் எனில் குருந்தூர்மலை விவகாரத்தில், தொல்லியல் துறை தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி கட்டளை ஒன்றை வழங்கியிருந்தது.

அக் கட்டளையில் தொல்லியல் துறையினர் நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மூன்று தடவைகள் மீறியதோடு, குருந்தூர் மலையில் விகாரை கட்டுவதற்கு ஒத்துழைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச கண்காணிப்பின்றி முன்னெடுக்கப்படுவதில் திருப்தியில்லை: ரவிகரன் | Excavation Of Kokkuthoduvai Human Burial

இந்நிலையில் தொல்லியல் துறையினர் இந்த அகழ்வுப் பணி விடயத்திலும் சரியாக நடந்து கொள்வார்களென நாம் எதிர்பார்க்க முடியாது.

அதேவேளை இந்த மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச கண்காணிப்பு தேவை எனவும், சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையிலேயே இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் எமது தமிழ் மக்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நாங்கள் நீதிமன்றையும், சட்டவைத்திய அதிகாரிகளையும் மதிக்கின்றோம்.

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கவிருக்கும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கவிருக்கும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு


மக்கள் பிரதிநிதிகள் செல்லத்தடை

ஆனால் அனைத்துத் தரப்பினரும் இந்த விடயத்தில் சரியாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்க முடியாதுள்ளது. குறிப்பாக இங்கு பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரே இங்கு அதிகமாக காணப்படுகின்றனர்.

இந்நிலையில் மக்கள் சார்பாக அங்கு சட்டத்தரணிகள் மாத்திரமே புதைகுழி வளாகத்திற்குள் செல்ல முடியும். மக்களின் பிரதிநிதிகளாக வேறு யாரும் புதைகுழி பிரதேசத்திற்குள் செல்ல முடியாது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச கண்காணிப்பின்றி முன்னெடுக்கப்படுவதில் திருப்தியில்லை: ரவிகரன் | Excavation Of Kokkuthoduvai Human Burial

எனவே எமக்கு சந்தேகங்கள் எழாதவாறு இந்த அகழ்வுப் பணிகள் இடம் பெறுவதுடன், உண்மைத்தன்மை வெளிப்பட வேண்டும்.

சர்வதேச மற்றும், ஐ.நாவின் கண்காணிப்புக் குழுக்கள் இல்லாமல் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுவதில் எனக்குத் திருப்தி இல்லை என்பதையும், தொல்லியல் திணைக்களத்தினையும் நாம் நம்பப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஓமானில் நிர்க்கதியாகும் இலங்கையர்களுக்கு உதவ நடவடிக்கை!

ஓமானில் நிர்க்கதியாகும் இலங்கையர்களுக்கு உதவ நடவடிக்கை!

புற்றுநோயுடன் போராடும் மாணவர் - உயர்தர பரீட்சையில் சித்தி

புற்றுநோயுடன் போராடும் மாணவர் - உயர்தர பரீட்சையில் சித்தி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US