கோட்டாபயவை அரியணை ஏற்றிய மெல்கம்: அரசியல் களத்தை அதிரவைக்கும் சனல்4 (Video)

Gotabaya Rajapaksa Sri Lanka Easter Attack Sri Lanka
By Dharu Sep 06, 2023 08:38 PM GMT
Report

இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டத்தின் பின்னணியில், தாமும் இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார முன்வைத்த குற்றச்சாட்டை கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் நிராகரித்துள்ளார். 

கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையும் ஆதரவு வழங்கியதாக மனுஷ நாணயக்கார முன்வைத்த கருத்து குறித்து லங்காசிறியின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். 

மேலும்  தெரிவித்த அவர், 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்காக நான் வேலை செய்ததாக ஒரு அரசியல்வாதி கடந்த காலங்களில் சர்ச்சையை பரப்பியிருந்தார்.

சனல்-4 ஆவணப்பட விவகாரம்: ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி சவால்

சனல்-4 ஆவணப்பட விவகாரம்: ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி சவால்

எமக்கு நீதி வேண்டும்

அவரும் ஒரு கத்தோலிக்க அமைச்சர் தான். அப்போது, நாம் அதனை எதிர்த்து கண்டனம் வெளியிட்டிருந்தோம். இந்த அரசியல்வாதியின் கருத்தை மற்றுமொரு அரசியல்வாதியும் இணைந்து சமூகத்தில் பரப்ப ஆரம்பித்தார்.


எனினும், நான் ஒரு அரசியல் தலைவர் அல்ல. கோட்டாபய ராஜபக்சவை நான் ஆதரித்ததாக குறித்த தரப்பினர் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

கோட்டாபயவை அரியணை ஏற்றிய மெல்கம்: அரசியல் களத்தை அதிரவைக்கும் சனல்4 (Video) | Easter Attack Channel 4 Viral Video Malkam Ranjith

ஆனால் குறித்த தரப்பினர் தற்போது இலங்கை அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறாக இலங்கையின் அரசியலில் ஈடுபடும் தரப்பினர் தற்போது அருவருப்புக்குரியவர்களாக மாறியுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. எமக்கு ஒரு சாதாரண சமூகம் தேவை. நீதி வேண்டும். எவரேனும் அதிகாரியொருவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால், அவர் தாமாக பதவி விலகி சட்ட நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும்.

கொலை குழு ஒன்றை உருவாக்கிய கோட்டாபய : சனல்4 காணொளியில் அம்பலமான இரகசியங்கள்

கொலை குழு ஒன்றை உருவாக்கிய கோட்டாபய : சனல்4 காணொளியில் அம்பலமான இரகசியங்கள்


எனினும், இலங்கையின் அரசியல்வாதிகள் விரட்டினாலும் போகமாட்டேன் என்கின்றவர்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல்-4 வின் ஆவணப்பதிவை அடிப்படையாக கொண்டு, கத்தோலிக்க திருச்சபை நான்கு முக்கிய கோரிக்கைகளை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது. 

கத்தோலிக்க திருச்சபை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சனல்-4 ஊடக நிறுவனம் குறித்து தவறான கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்.'' என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரியுள்ளார். 

பிள்ளையானுக்கு உதவிய சிறையதிகாரி யார்.. சனல் 4இல் வெளியான மற்றுமொரு ஆதாரம்

பிள்ளையானுக்கு உதவிய சிறையதிகாரி யார்.. சனல் 4இல் வெளியான மற்றுமொரு ஆதாரம்


சனல்-4வின் ஆவணப்பதிவு

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆவணப்பதிவை வெளியிட சனல்-4 மேற்கொண்ட நடவடிக்கைக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் நன்றி தெரிவித்துள்ளார். 

சனல்-4 ஊடகம் தொடர்பில் தவறான கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிடுவதை விட்டுவிட்டு, குறித்த ஆவணப்பதிவில் வெளியிடப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையை மக்கள் அவதானிக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார். 

இந்த ஆவணப்பதிவு தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மற்றுமொரு குழு அமைக்கப்படுவது பொது நிதியை வீணடிக்கும் செயலாக அமையுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சனல்-4வின் ஆவணப்பதிவு தொடர்பில் விசேட நாடாளுமன்ற தெரிவு குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், இலங்கை அரசாங்கத்திடம் நான்கு முக்கிய கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல்-4 நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்பதிவில் பெயரிடப்பட்டுள்ள நபர்கள் தொடர்பான பரந்துபட்ட மற்றும் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் குறித்த விசாரணைகள் சுயாதீன சர்வதேச விசாரணை குழுவினால் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குறித்த குழுவின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதோடு, சனல்-4வின் ஆவணப்பதிவில் பெயரிடப்பட்டுள்ள அரசியல்வாதிகள், பொலிஸார் உள்ளிட்ட அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார். 

லசந்தவின் கொலைக்கு ஏன் நீதி நிலைநாட்டப்படவில்லை: ரணிலிடம் சஜித் கேள்வி

லசந்தவின் கொலைக்கு ஏன் நீதி நிலைநாட்டப்படவில்லை: ரணிலிடம் சஜித் கேள்வி

சனல் 4 ஆவணத்தால் அதிரும் இலங்கை அரசியல்: பிள்ளையான் அடுக்கும் காரணங்கள் (Video)

சனல் 4 ஆவணத்தால் அதிரும் இலங்கை அரசியல்: பிள்ளையான் அடுக்கும் காரணங்கள் (Video)


10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US