ஓமானில் நிர்க்கதியாகும் இலங்கையர்களுக்கு உதவ நடவடிக்கை!
ஓமான் பொலிஸாருக்கு சிங்கள மொழியில் நேரடியாக முறைப்பாடு தெரிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கமும் இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய மனித கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்டு ஓமானில் நிர்க்கதிக்கு உள்ளாகும் இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் ஓமான் அரசாங்கமும் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இலவச அழைப்பு
அதன்படி, 96 88 00 77 444 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், www.nccht.com என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்தும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
