முன்னாள் ஜனாதிபதி விடுதலை செய்தவருக்கு சர்வதேச பிடியாணை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஜனாதிபதி பொது மன்னிப்புப் பெற்ற ரோயல் பார்க் கொலையாளிக்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கையுடனான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜகிரிய ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதியில் நடைபெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜுட் ஷ்ரமந்த எனும் குற்றவாளிக்கு மைத்திரிபால சிரிசேனவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டார்.
எனினும், அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், ஜுட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு அண்மையில் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
சிவப்பு எச்சரிக்கை
அத்துடன், நாட்டை விட்டும் வெளியேறியுள்ள அவரை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறும் சட்ட மா அதிபருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அதன்போது, சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சஜித் பண்டார, ஜுட் ஷ்மரந்தவுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையுடன் கூடிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
