பொரளை விபத்து: சந்தேகநபரின் வைத்திய பரிசோதனையில் வெளிவந்த தகவல்
கொழும்பு பொரளையில் இன்று(28) காலை இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய கிரேன் வாகன சாரதி மீது நடத்தப்பட்ட வைத்திய பரிசோதனையில் அவர் கஞ்சா போதைப்பொருளை பாவித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கிரேன் வாகனத்தின் உரிமையாளரும் சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கிரேன் வாகனத்தின் உரிமையாளர் மற்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சாரதியை நாளையதினம் புதுக்கடை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரேக் கட்டமைப்பு செயலிழப்பு
ராஜகிரியவிலிருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் வாகனமொன்று பொரளையில் நிறுத்தப்பட்டிருந்த ஆறு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று கார்களுடன் மோதியது.

இதன்போது, 62 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன் 7 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கிரேன் வாகனத்தின் பிரேக் கட்டமைப்பு செயலிழந்ததும் வாகனம் அதிவேகமாக செலுத்தப்பட்டதுமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - ராகேஷ்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        