முன்னாள் கடற்படைத் தளபதிக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில், பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல் தொடர்பான விசாரணை தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி இன்று (28) குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, அவர் இன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தல் சம்பவம்
பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல் தொடர்பான விசாரணையுடன் இந்த கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் அவர் கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில் நடந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஜூலை 15, 2020 அன்று பதவியேற்றார்.
டிசம்பர் 18, 2022 அன்று தனது பதவிக்காலம் முடிந்ததும் அவர் இலங்கை கடற்படையின் தளபதி பதவியில் இருந்து விலகினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
