அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை திகதி அறிவிப்பு
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் I, II மற்றும் III ஆம் தரத்திற்கான பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி இந்த பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரீட்சைக்கு சுமார் 52,756 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி அட்டை பதிவிறக்கம்
இதன்படி குறித்த பரீட்சை நாடளாவிய ரீதியில் 353 நிலையங்களில் நடைபெறவுள்ளது.
மேலும் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகள் www.slida.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களின் அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
