இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த பதவி பிரமாணம்
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பல்வேறு சர்ச்சைகள்
லொஹான் ரத்வத்த சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தார்.
கைதி ஒருவரை துப்பாக்கி கொண்டு மிரட்டியமை தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதுடன், இந்த சம்பவத்தினால் லொஹான் ரத்வத்த பதவி விலகியிருந்தார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
