மின் கட்டணத்தை இரத்துச் செய்யுமாறு அழுத்தம் கொடுத்த முன்னாள் அமைச்சர்: வெளியாகியுள்ள சாட்சியம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் மின் சக்தி அமைச்சராக காமினி லொக்குகே தனக்கு விசுவாசமான வர்த்தகர்களின் மின் கட்டணத்தை இரத்துச் செய்யுமாறு அழுத்தங்களை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடிதம் மூலம் அழுத்தம் கொடுத்துள்ள காமினி லொக்குகே

காமினி லொக்குகே கடிதம் மூலம் இலங்கை மின்சார சபையின் நிறைவேற்று பொறியியலாளர்களுக்கு இவ்வாறு பல அழுத்தங்களை கொடுத்துள்ளதுடன் அதற்கான கடிதங்களும் கிடைத்துள்ளன.
சிக்கியுள்ள சாட்சியங்கள்
நுகேகொடை ஹைலெவல் வீதியில் உள்ள வர்த்தகர் ஒருவருக்காக காமினி லொக்குகே அனுப்பிய கடிதம் ஒன்று இதற்கான சாட்சியமாக ஊடகங்களுக்கு கிடைத்துள்ளது. இலங்கை மின்சார சபை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெரும் தொகை கடனை செலுத்த வேண்டியுள்ளதுடன் அது முடியாமல் போயுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் வெளியிட்டுள்ள இப்படியான உத்தரவுகள் பணத்தை செலுத்த முடியாமைக்கான பிரதான காரணங்களாக இருப்பதாக இலங்கை மின்சார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri