2024இல் ஜனாதிபதிக்கு தகுதியானவர் பஸில் ராஜபக்சவே - காமினி லொக்குகே தெரிவிப்பு
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்துத் தகுதிகளும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கே உள்ளது என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மீண்டுமொரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடபோவதில்லை என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.
அதனால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தற்போதைக்குக் கதைக்க வேண்டிய அவசியம் கிடையாது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் போட்டியிடப் போகின்றார்கள் என்பது குறித்து சரியாகக் கூற முடியாது என்ற போதிலும், பஸில் ராஜபக்சவுக்கு அந்த தகுதி உள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவார் எனவும், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் எனவும் எந்தவொரு நபரும் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri