முன்னாள் அமைச்சர் காஞ்சன நிலக்கரி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (18) முன்னிலையாகியுள்ளார்.
நிலக்கரி கொள்வனவு மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவில் முன்னிலை
அவர் அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், நடைமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து ஆணைக்குழுவினால் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் மின்சார உற்பத்திக்கான பிரதான எரிபொருட்களில் ஒன்றாக நிலக்கரி காணப்படுவதுடன், அதன் கொள்வனவு தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தன.

இந்நிலையில், நிலக்கரி கொள்வனவு நடவடிக்கைகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தீர்மானங்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் நோக்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் இன்றைய தினம் இடம்பெறும் விசாரணைகளில் நிலக்கரி கொள்வனவு தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 22 மணி நேரம் முன்
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam