விகாரமகா தேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு!
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி விகாரமகா தேவி பூங்காவில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிக்குகள் குழுவினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று (23) முற்பகல் வருகை தந்துள்ளனர்.
உலபனே சுமலங்க தேரர், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் மற்றும் குழுவினர் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
விகாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக உள்ள புத்தர் சிலை அமைந்துள்ள வளாகம் உள்ளிட்ட பல இடங்களிலும், பல வீதிகளிலும் தொடர்ச்சியாகத் தங்கியிருப்பதிலிருந்து தவிர்க்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் மூலம் நீதிமன்றத்தில் கருத்துக்களைத் தெரிவிப்பதற்காகவே அவர்கள் அங்கு வருகை தந்திருந்தனர்.

இவர்களுடன் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி உள்ளிட்ட பல பிக்குகளும் வருகை தந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளும் மற்றவர்களும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தங்களது வாதங்களை முன்வைப்பதற்காக, இன்று (23) நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அக்குழுவினருக்காக முன்னிலையாக உள்ளதாக கூறப்படுகின்றது.
you may like this video
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பதற்ற நிலை - பொலிஸ் அதிகாரி தொடர்பில் பெண்ணின் அதிர்ச்சி குற்றச்சாட்டு