யாழில் நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைந்த சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணத்தின் பிறவுன் வீதிப் பகுதியில் நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள் இரகசியமாக நுழைந்து, கத்தி முனையில் பெண்ணொருவரை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்த முயன்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த பகுதியில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.
சந்தேகநபர் கைது
இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின்போது, முறைப்பாடு செய்த பெண்ணின் வீட்டு வளாகத்திற்குள் தான் நுழைந்ததாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னர் அப்பகுதியில் உள்ள வேறு வீடுகளின் வளாகங்களுக்குள் நுழைந்துள்ளாரா என்பது தொடர்பிலும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 17 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri