சட்டவிரோதமாக இயங்கி வந்த விடுதி முற்றுகை..! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த சட்டவிரோதமான விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், அதன் மேலாளர் உட்பட ஐவர் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை கடவத்தை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
கைது செய்யப்பட்ட பெண்கள், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஒருவரிடம் இருந்து 5,000 ரூபாய் கட்டணமாக அறவிட்டுள்ளதாகவும், இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் 50,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர்களான பெண்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக போதை மாத்திரைகளை பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்..! முன்னெடுக்கப்பட்டுள்ள கவனஈர்ப்பு போராட்டம்